Homeசெய்திகள்இந்தியாஇன்று கரையைக் கடக்கிறது 'பிபர்ஜாய்' புயல்!

இன்று கரையைக் கடக்கிறது ‘பிபர்ஜாய்’ புயல்!

-

 

இன்று கரையைக் கடக்கிறது 'பிபர்ஜாய்' புயல்!
Photo: ANIBiparjoy

‘பிபர்ஜாய்’ புயல் இன்று (ஜூன் 15) மாலை குஜராத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு 75,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம்!

அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில் இன்று (ஜூன் 15) மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 145 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புயலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இருந்து சுமார் 75,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்தப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க, மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், கட்ச் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர்கள் யார் யார்?- விரிவான தகவல்!

குஜராத் மாநிலத்தின் அண்டை மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்திலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்திலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 60,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன.

போர்பந்தர், மும்பை உள்ளிட்ட கடற்கரைகளில் அலைகள் ஆக்ரோஷமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ