spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதக்காளியைப் பாதுகாக்க 'பவுன்சர்ஸ்'!

தக்காளியைப் பாதுகாக்க ‘பவுன்சர்ஸ்’!

-

- Advertisement -

 

தக்காளியைப் பாதுகாக்க 'பவுன்சர்ஸ்'!
File Photo

நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில், வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்கள் என்றழைக்கப்படும் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.

we-r-hiring

“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் காய்கறி கடையை நடத்தி வரும் வியாபாரி அஜய் ஃபவுஜி, தக்காளியை வாங்க வரும் மக்கள், மோதலில் ஈடுபடுவதாலும், சிலர் தக்காளியைத் திருடிச் செல்வதாலும் பவுன்சர்களின் சேவையை நாடியுள்ளதாகக் கூறியுள்ளார். அதேபோல், தக்காளி ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், மக்கள் 50 முதல் 100 கிராம் வரையில் மட்டுமே தக்காளியை வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டெல்லி, ஹரியானா, அசாம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஜம்மு- காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பூண்டு, இஞ்சி, எண்ணெய், பருப்பு வகைகள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்டப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ