Homeசெய்திகள்இந்தியாஎடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

-

 

எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது காவல்துறையினர் போக்சோ வழக்கைப் பதிவுச் செய்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பாடுகளின் குவியல் – ஜவாஹிருல்லா

கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாயார் பெங்களூரு சதாசிவநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பிப்ரவரி 02- ஆம் தேதி தானும், தனது மகளும் உதவிக்காக எடியூரப்பாவின் வீட்டிற்கு சென்றோம். அப்போது, தனது மகளை அறைக்கு அழைத்து சென்ற எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாரில் கூறியுள்ளார். தனது மகள் தன்னிடம் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளேன் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, எடியூரப்பா மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகா மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை

18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2012- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது போக்சோ சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ