Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை

சென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை

-

ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சென்னையில் எஸ்.டி. கூரியர் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரிக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் ST கொரியரில் நேற்று காலை முதலே அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராயநகர், மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் எஸ்.டி. கூரியர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ