திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் அரசு பஸ் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சாலையில் குறுக்கே நின்றதால் பல கிலோ மீட்டர் போக்குவரத்து பாதிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் இருந்து அலிபிரி வழியாக திருமலைக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இரண்டாவது மலை பாதையில் ஹரிணி நிழற்பந்தல் தாண்டி பஸ் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் சாலையின் குறுக்கே நின்றதால் பல கிலோமீட்டர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பஸ்ஸில் பயணம் செய்து காயம் அடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் குறுக்கே உள்ள பஸ்சை கிரேன் மூலம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் அகற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் மற்றும் தேவஸ்தான போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.