Homeசெய்திகள்இந்தியாBYJU's நிறுவனத்திற்கு ரூபாய் 9,300 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை!

BYJU’s நிறுவனத்திற்கு ரூபாய் 9,300 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை!

-

- Advertisement -

 

அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பாக 9,300 கோடி ரூபாய்க்கு மேலான தொகைக்கு விளக்கம் கேட்டு BYJU’s நிறுவனம் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!

கல்வி நிறுவனமான BYJU’s மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்திரன் மீதான நடவடிக்கைக்கான காரணங்களை வெளியிட்டுள்ள அமலாக்கத்துறை, இந்தியாவிற்கு வெளியே செய்துள்ள முதலீடுகள், பணப்பரிவர்த்தனைகளுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளது.

பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக்கு தேவையான ஆவணங்களைத் தாமதமாக சமர்பித்ததாகத் தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, அந்நிய செலாவணி முறைப்படுத்தும் ஃபெமா சட்டத்தின் படி 9,300 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தில் 751.9 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்!

நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளத் தொகையைப் போல மூன்று மடங்கு வரை அபராதமாக விதிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ரவீந்திரனின் வீடு, BYJU’s அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ