
சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தோல்விக்கு பின் இந்திய வீரர்களை ஆறுதல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!
நேஷ்னல் ஹெரால்டு நிறுவன பத்திரிகையின் பங்கு, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்திற்கு கைமாறியது. இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, கடந்த 2012- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. இதற்கிடையே, ‘Associated Journals Ltd’ நிறுவனத்தின் 661.69 கோடி ரூபாய் சொத்துகளும், யங் இந்தியா நிறுவனத்தின் 90.21 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!
டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஷ்னல் ஹெரால்டு நிறுவனம் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.