Homeசெய்திகள்இந்தியாகுடியுரிமைத் திருத்தச் சட்டம் சொல்வது என்ன?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் சொல்வது என்ன?

-

 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் சொல்வது என்ன?

நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ. அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

ஏமாற்றம் அளித்த இந்திய அழகி… தட்டித் தூக்கிய செக் குடியரசு அழகி..!!

கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் சொல்வது என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு சி.ஏ.ஏ. குடியுரிமை அளிக்கும். 2014- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதிக்குள் முன்னர் குடியேறிய இந்துகள், சமணர்கள், சீக்கியர், பௌத்தர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

தேர்தல் ஆணையர்களை நியமிக்கத் தடைக் கோரி வழக்கு!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவில் குடியேறலாம். இதே நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர், இலங்கை அகதிகளுக்கு சி.ஏ.ஏ.வின் கீழ் குடியுரிமை பெற அனுமதியில்லை. இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே ஆவணங்கள் இல்லையென்றாலும் குடியுரிமையைப் பெறலாம்.

பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமைக் கோரி விண்ணப்பிக்கலாம். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சி.ஏ.ஏ. கொண்டு வர கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

MUST READ