2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
2026ம் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ (CBSE) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி (NEP 2020), மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அதிக மதிப்பெண் பெற வாய்ப்பளிக்கவும் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் தேர்வு பிப்ரவரியிலும், விருப்பத்தேர்வாக இரண்டாவது தேர்வு மே மாதத்திலும் நடைபெறும்.
முதல் தேர்வு பிப்ரவரியிலும், இரண்டாவது தேர்வு மேயிலும் நடத்தப்படும். முதல் தோ்வானது கட்டாயமானது, இரண்டாவது தோ்வு விருப்பத்திற்குரியது. இரண்டு தேர்வுகளையும் எழுதும் மாணவர்களில், எதில் அதிக மதிப்பெண் உள்ளதோ, அதுவே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும். இரண்டு தேர்வுகளும் முழு பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையும்.

இந்த நடவடிக்கை மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கி, தோல்வி பயத்தைப் போக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் தேர்வு முடிவுகள் ஏப்ரலிலும், இரண்டாவது தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்திலும் அறிவிக்கப்படும். ஒரு மாணவர் 2வது கட்ட தேர்வில் 3 பாடங்கள் வரை எழுதி, எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதை தக்க வைத்துக்கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ வாாியம் தெரிவித்துள்ளது.
