
பீகாரில் மீண்டும் பா.ஜ.க. உடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்துள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, பீகார் அரசியல் சூழல் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடு முதலீடுகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? – ஈபிஎஸ் கேள்வி
பீகார் மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் உறுதியளித்தாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…
இந்த சந்திப்பின் மூலம் வரும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இணைய வாய்ப்புள்ளதாக தகவல் கூறுகின்றன.