
இஸ்ரோவின் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது சந்திரயான்-3 விண்கலம். நிலவின் வெப்பநிலை, மண்ணின் தன்மை, மின்னூட்டம், அதிர்வு, தட்ப வெப்பநிலை குறித்து லேண்டர், ரோவர் ஆய்வு செய்கிறது.
நிலவில் சந்திரயான்- 3ஐ தரையிறக்கும் பணி தொடங்கியது!
தனது கையில் வைத்திருந்த தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொளி மூலம் இஸ்ரோ செயலகத்துடன் இணைந்தார்.
காணொளி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சந்திரயான்- 3 திட்டத்தின் வெற்றி 140 கோடி மக்களின் வெற்றி. சந்திரயான்- 3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில், புதிய இந்தியா உருவாகியுள்ளது. இந்தியாவின் காலடி நிலவில் பதிந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகமடைய வைத்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பெருமிதம் பொங்குகிறது.
சரித்திர சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள். இந்தியாவின் வருங்கால வளர்ச்சியின் உதயமாக இச்சாதனை நிகழ்கிறது. தென் துருவத்தை அடைந்ததன் மூலம் யாரும் அடையாத வெற்றியை இந்தியா அடைந்திருக்கிறது. நிலா….நிலா… ஓடிவா…..பாடலை மெய்ப்பித்த இஸ்ரோ விஞ்ஞானிகள். சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்.
“காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம்”- முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!
விண்வெளிக்கும், நிலவுக்கும் மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.