Homeசெய்திகள்இந்தியாசந்திரயானின் வெற்றியில் பங்களித்த தனியார் நிறுவனங்கள்!

சந்திரயானின் வெற்றியில் பங்களித்த தனியார் நிறுவனங்கள்!

-

 

சந்திரயானின் வெற்றியில் பங்களித்த தனியார் நிறுவனங்கள்!
Photo: ISRO

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கும் பங்கு உண்டு. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

பல தேசிய விருதுகளை அள்ளிய ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்li திரைப்படம்!

சந்திரயான்-3 விண்கலத்திற்கான கட்டமைப்பு வசதிகள் ஏவுதளம் போன்றவற்றை நிறுவுவதில் டாடா கன்சல்டிங் நிறுவனம் உதவியுள்ளது. விண்கலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு சாதனங்களை எல் அண்ட் டி தயாரித்து தந்துள்ளது. இதில் சில கருவிகள் கோவையில் உள்ள எல் அண்ட் டி ஆலையில் தயாரிக்கப்பட்டவை.

கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம், எல்110 இன்ஜின் மற்றும் அது தொடர்பான பொருட்களைத் தயாரித்து தந்துள்ளது. ஆனந்த் டெக்னாலஜீஸ் நிறுவனம், கணினிகள் மற்றும் மின்னணு சாதனப் பொருட்களைத் தயாரித்து தந்துள்ளது.

‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

பிரக்யான் ரோவருக்கான மின் பொருட்களை ஆம்னிபிரசன்ட் ரோபோடிக் டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்து தந்துள்ளது. எம்டார்ட் டெக்னாலஜீஸ், மிஸ்ரா தாது நிகர், கோர்ட்டா இண்டஸ்ட்ரீஸ், வஜ்ரா ரப்பர்ஸ் என பல நிறுவனங்களும் சந்திரயான் வெற்றியில் சிறு சிறு பங்களிப்பை அளித்துள்ளனர்.

இவைத் தவிர, பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் விண்கலத்துக்கான உலோக தகடுகளை உருவாக்கித் தந்துள்ளது. பாரத் ஹெவி எலெட்ரிக்கல்ஸ் நிறுவனம், லித்தியம் அயான் பேட்டரிகள், டைட்டானியம் உலோகக் கலவையுடன் கூடிய உந்துவிசைக் கலனை உருவாக்கித் தந்துள்ளது.

MUST READ