Homeசெய்திகள்இந்தியா"உங்கள் ராஜினாமாவையும் கேட்போம்": பிரதமர் மோடிக்கு சி.ஜே.பி தலைவர் அபிஜீத் தீப்கே நேரடி எச்சரிக்கை!

“உங்கள் ராஜினாமாவையும் கேட்போம்”: பிரதமர் மோடிக்கு சி.ஜே.பி தலைவர் அபிஜீத் தீப்கே நேரடி எச்சரிக்கை!

-

- Advertisement -

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், “அமைச்சரின் ராஜினாமாவை ஏற்காவிட்டால், அடுத்ததாகப் பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமாவையும் கோருவோம்” என்று காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைவர் அபிஜீத் தீப்கே பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அபிஜீத் தீப்கே

we-r-hiring

தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக சி.ஜே.பி மற்றும் மாணவர் அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டமும், சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டமும் நடைபெற்று வருகிறது.

“தோல்வியடைந்த அமைச்சரைக் காப்பாற்றக் கூடாது”

போராட்டத்தில் பேசி வரும் சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் தீப்கே, கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்த ஒரு தோல்வியடைந்த கல்வி அமைச்சரைத் தொடர்ந்து காப்பாற்ற மத்திய அரசு முயல்கிறது என்றும், பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அரசு இந்தத் நியாயமான கோரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால், மக்கள் மற்றும் மாணவர்களின் கோபம் நேரடியாகப் பிரதமர் பக்கமே திரும்பும் என்றும், அடுத்து நாங்கள் பிரதமரின் ராஜினாமாவையே கோர வேண்டிய சூழல் உருவாகும் என்றும் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய எதிரொலி: டெல்லி முதல் சென்னை வரை தொடரும் போராட்டம்

வினாத்தாள் கசிவு தொடர்பாகத் தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த போதிலும், “கல்வி அமைச்சரின் ராஜினாமா மறுக்க முடியாத முதன்மை கோரிக்கை” என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர்.

  • டெல்லி ஜந்தர் மந்தர்: 20 நாட்களைத் தாண்டியும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் தட்டு, கரண்டிகளுடன் பங்கேற்கும் வினோத போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

  • சென்னை & தமிழக மாவட்டங்கள்: சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துச் சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நெல்லை, சேலம், திருப்பூர் மற்றும் புதுச்சேரியிலும் கல்லூரி மாணவர்கள் வீதியில் இறங்கி டெல்லி போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல முதன்மை எதிர்க்கட்சிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருவதால், மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கத் தவறினால் பிரதமருக்கு எதிராகக் கோரிக்கைகள் திரும்பும் என்றும் அபிஜீத் தீப்கே எச்சரித்த செய்தியை நேரடியாகப் பதிவு செய்துள்ளதால் இந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆறு நீர் பங்கீடு: தனித் தீர்ப்பாயம் அமைக்கத் தமிழ்நாடு அரசு தீவிர வலியுறுத்தல்!

MUST READ