Homeசெய்திகள்இந்தியாஎன்ன செய்யப் போகிறார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்?

என்ன செய்யப் போகிறார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்?

-

 

அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!
File Photo

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

“ஆன்லைன் ரம்மி- எத்தனை உயிர்கள் பறிபோவதை தமிழ்நாடு அரசு வேடிக்கப் பார்க்கப் போகிறது?”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி!

இதையடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்யப் போகிறார்? என்று கேள்வி எழுந்துள்ளனர். டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா அரவிந்த் கெஜ்ரிவால்?, சிறையில் இருந்தபடியே முதலமைச்சர் பணியைத் தொடருவாரா அரவிந்த் கெஜ்ரிவால்? அரவிந்த் கெஜ்ரிவால் பதவியைத் துறந்தால் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கப் போவது யார்? சிறையில் இருந்த படியே முதலமைச்சர் பணிகளைத் தொடர சட்டத்தில் இடம் உள்ளதா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது.

கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

இதனிடையே, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவுறுத்தலின் படி, இன்று மாநில அமைச்சரவை கூட்டம், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், அவரது மனைவி சுனிதா முதலமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ