கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் நில முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையாவுக்குs எதிராக விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டமன்றமான விதான சவுதா முன்புள்ள காந்திசிலை அருகே முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் துணை முதலமைச்சர் தலைமையில் ஆளுநர் மாளிகையை நோககி பேரணியாக சென்றனர். பேரணியின்போது ஆளுநர் அரசியல் கட்சி அலுவலகமாக செயல்படுவதாகவும், ஆளுநர் அரசை கவிழ்க்க முயற்சிப்பதாகவும்ட குற்றம்சாட்டப்பட்டது. பேரணியின் முடிவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, கோரிகை மனுவை வழங்கினர்.