Homeசெய்திகள்இந்தியாராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து... சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது  வழக்குப்பதிவு

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து… சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது  வழக்குப்பதிவு

-

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமருக்கு துணிச்சல், ஆற்றல் இல்லை"- ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!
Photo: Congress

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி, இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இடஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி
யோசிக்கும் என்றும், 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும்
நாட்டில் இருப்பதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த கருத்தின் ராகுல்காந்தி இடஒதுக்கீட்டை ஒழிக்க முயல்வதாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், அதன் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ  சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், சஞ்சய் கெய்க்வாட் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இந்நிலையில், சஞ்சய் கெய்க்வாட் மீது புல்தானா நகர காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

MUST READ