Homeசெய்திகள்இந்தியா"கோரமண்டல் ரயில் 128 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது"- ரயில்வே அதிகாரி பேட்டி!

“கோரமண்டல் ரயில் 128 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது”- ரயில்வே அதிகாரி பேட்டி!

-

 

"கோரமண்டல் ரயில் 128 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது"- ரயில்வே அதிகாரி பேட்டி!
Photo: ANI

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அதிகாரி ஜெய வர்மா சின்ஹா, “ஒடிஷாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் 128 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் விரைவு ரயில் தான் விபத்தை ஏற்படுத்தியது. ரயில்வே சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விபத்து நேர்ந்துள்ளது; எனினும், விசாரணை அறிக்கைக்கு பின் முழுமையாக தெரிய வரும்.

ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்தது தமிழக குழு!

விபத்தில் கோரமண்டல் ரயில் கடும் சேதமடைந்ததால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம் புரளவில்லை; யஷ்வந்த்பூர் விரைவு ரயிலில் இரண்டு பெட்டிகள் மட்டும் தடம் புரண்டது. யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ஹவுராவில் இருந்து பெங்களூரு நோக்கி 126 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது” எனத் தெரிவித்துள்ளார்.

பாலசோர் பகுதியில் இரண்டாவது நாளாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார்.

ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!

அப்போது, எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று உறுதியளித்துள்ளார்.

MUST READ