டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவ பரிசோதனையின் போது அவரது மனைவி சுனிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரத்தில் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதனை நீதிமன்றம் மறுத்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். அமலாக்கத்துறையின் காவலில் அல்ல. எனவே அமலகாத் துறையின் பதிலை நீதிமன்றம் எதிர்பார்க்கவில்லை. தேவைப்பட்டால் ஜெயில் அதிகாரிகளிடம் பதில் கேட்டுக் கொள்வோம் என்றும் அமலாக்கத்துறை தலையிட வேண்டாம் என்று ரோஸ் அவென்யூ நீதிபதி முகேஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மருத்துவ பரிசோதனை குறித்து பதிலளிக்க திகார் சிறை அதிகாரிகளுக்கு ரோஸ் அவென்யூ நீதிபதி உத்தரவிட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலை- தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. (apcnewstamil.com)
மருத்துவ பரிசோதனை குறித்த இடைக்கால மனு நாளை விசாரிக்கப்படும் எனவும், அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 19 ஆம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதி முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.