வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கவிஞராக, சிறந்த நாடாளுமன்றவாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாகப்பதிந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவர் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார். அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராகவும், சக்திவாய்ந்த கவிஞராகவும் எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது ஆளுமை, பணி மற்றும் தலைமைத்துவம் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிகாட்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.



