spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"டெல்லி அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது"- அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

“டெல்லி அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது”- அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"டெல்லி அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது"- அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

we-r-hiring

டெல்லி அரசை கவிழ்க்க சதி நடப்பதாக அந்த மாநில அமைச்சர் அதிஷி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்வி பயத்துக்குள்ளான பாஜக… தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது – முத்தரசன்!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து, அக்கட்சியின் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அதிஷி, “முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது. கடந்த ஒருவாரமாக ஆதாரமற்ற கடிதங்களை மத்திய உள்துறைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் எழுதி வருகிறார்.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் நீக்கப்பட்டதைப் பார்க்கும் போது, டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க பா.ஜ.க. முயன்று வருவது தெரிகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ