spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇனி இந்த நகரங்களில் 5ஜி சேவை!- ஒன்றிய அரசு அதிரடி

இனி இந்த நகரங்களில் 5ஜி சேவை!- ஒன்றிய அரசு அதிரடி

-

- Advertisement -

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நாக்பூர், புனே மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா, சிலிகுரி ஆகிய நகரங்களில் இனி 5ஜி சேவை கிடைக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் உத்திரபிரதேச மாநிலத்தில் வாராணசி, லக்னோ மற்றும் கர்நாடகாவில் பெங்களூருவில் 5ஜி சேவை வழங்கப்படும்.

we-r-hiring

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்திலும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரிலும், ஹரியாணா மாநிலத்தில் பானிபட்டிலும் 5ஜி சேவை வழங்கப்படும். அசாமில் கெளஹாத்தி, கேரளாவில் கொச்சி, பீகாரில் பாட்னா, ஆந்திராவில் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இந்த சேவை வழங்கப்படும்.

இதேபோல் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், முறையே அகமதாபாத், காந்திநகர், பாவ்நகர், மெசானா, ராஜ்கோட், சூரத், வதோதரா, அமரெலி, போடாட், ஜுனகாத், போர்பந்தர், ஹிமத்நகர், மோடாசா, பாலன்பூர், பதான், பூஜ், ஜாம் நகர், கம்பாலியா, மோர்வி, வாத்வான், பாருச், நவ்சாரி, ராஜ்பிப்லா, வல்சாத், வியாரா, அனாந்த், சோட்டா உதய்பூர், தோஹாட், கோத்ரா, லூனாவாடா, நடியாத் ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவை வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

MUST READ