தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் விஐபி பிரேக் உள்ளிட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இயலாது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜயின் ‘அழகிய தமிழ் மகன்’!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், வி.ஐ.பி.கள் உள்ளிட்டோர் சிறப்பு தரிசனம் செய்ய குறிப்பிட்ட நேரங்களில் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளன.
எனவே, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் உள்ளிட்ட தரிசனம் டிக்கெட்டுகள், தங்குவதற்கு தேவையான அறைகள் ஆகியவற்றை முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களில் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இயலாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!
தகுதி வாய்ந்த பக்தர்கள் நேரில் வரும் நிலையில், அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் மட்டும் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரிசனம் டிக்கெட்டுகள், தங்கும் அறைகள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.