Homeசெய்திகள்இந்தியாதேர்தல் ஆணையர்களை நியமிக்கத் தடைக் கோரி வழக்கு!

தேர்தல் ஆணையர்களை நியமிக்கத் தடைக் கோரி வழக்கு!

-

 

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டத்தின் கீழ் நிரப்பத் தடைக் கோரி காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது – ஈபிஎஸ்

அருண் கோயல் ராஜினாமாவைத் தொடர்ந்து 2 தேர்தல் ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழலில், காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டத்தின் கீழ் நிரப்பத் தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது – வைகோ!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கீழ் உள்ள இரண்டு தேர்தல் ஆணையர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வரும் சூழலில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

MUST READ