Homeசெய்திகள்இந்தியா"தேர்தல் பத்திரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்?"- உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

“தேர்தல் பத்திரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்?”- உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

-

 

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

“மிக சுலபமாக சேகரிக்கக் கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட அவகாசம் கோருவது ஏன்?” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியது.

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கி வேன் டிரைவர் மரணம் – முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்!

தேர்தல் பத்திரத்தை ரத்துச் செய்த உச்சநீதிமன்றம், மார்ச் 06- ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் விவரங்களைத் தர உத்தரவிட்டது. கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரத்தை மார்ச் 06- ஆம் தேதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சூழலில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஜூன் 10- ஆம் தேதி வரை அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று (மார்ச் 11) காலை 11.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது; அதுவரை என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்? எஸ்.பி.ஐ. வங்கியால் செய்ய முடியாத வேலையை எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!

24- க்கும் குறைவான அரசியல் கட்சிகள் தானே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன? கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள், அவர்களுக்கு இடையிலான தொடர்பு பற்றி எதுவும் கேட்கவில்லை. மிக சுலபமாக சேகரிக்கக் கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட அவகாசம் கோருவது ஏன்? மிக எளிமையான உத்தரவைப் பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், எஸ்.பி.ஐ.யின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அத்துடன், நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களைத் தாக்கல் செய்யவும் எஸ்.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.

MUST READ