
டெல்லியில் இன்று (அக்.09) மதியம் 12.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்தார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!
அப்போது அவர் கூறியதாவது, “மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் நவம்பர் 07- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் நவம்பர் 23- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நவம்பர் 30- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் நவம்பர் 17- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 07- ஆம் தேதி மற்றும் நவம்பர் 17- ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணையை வெளியிட்டு அதிரடி காட்டிய ராஜஸ்தான் அரசு!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 03- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.