Homeசெய்திகள்இந்தியா"தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை?"- எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

“தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை?”- எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

-

 

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் திருத்தும் கோரி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அத்துடன், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகையில் தேர்தல் பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்த நிறுவனங்கள் குறித்து விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, எஸ்.பி.ஐ. அளித்த தேர்தல் பத்திர விவரங்களை சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பாடுகளின் குவியல் – ஜவாஹிருல்லா

அப்போது, தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? தீர்ப்பின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் என்று எஸ்.பி.ஐ. வங்கி மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். அத்துடன், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்.பி.ஐ. வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

MUST READ