
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

டெங்கு தடுப்பு- ஆட்சியர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்!
டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை டெல்லி கிருஷ்ணமேனன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து பூங்கொத்து வழங்கினார்.
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விளக்கினார். 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
ஆவடி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ள தொகுதிகள், வேட்பாளர் பட்டியல், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் ஆலோசித்ததாகத் தெரிகிறது. தமிழகத்தில் நிலவு தற்போதைய அரசியல் சூழல், சனாதன தருமம் குறித்த விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு உள்ளிட்டவைக் குறித்தும் அமித்ஷாவிடம் விவாதித்ததாகத் தெரிகிறது.


