Homeசெய்திகள்இந்தியா"ஜனவரியில் சென்னை- பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும்"- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

“ஜனவரியில் சென்னை- பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும்”- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

-

 

 

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற
"100% எத்தனாலில் ஓடும் வாகனங்கள் விரைவில் அறிமுகம்"- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு!
Photo: Union Minister Nitin Gadkari

சென்னை, பெங்களூரு இடையேயான அதிவிரைவுச் சாலை வரும் ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “வாகன உற்பத்தியில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னையில் இருந்து டெல்லியை இணைக்கும் வகையில் பசுமை வழி அதிவிரைவுச் சாலை பணி நடைபெறுகிறது.

வரும் ஜனவரி மாதம் முதல் சென்னை- பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும். அதிவிரைவுச் சாலையால், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இரண்டு மணி நேரத்தில் செல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!

இதனால் சென்னை, பெங்களூரு இடையேயான வர்த்தகம் உச்சத்தைத் தொடும் எனவும், சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

MUST READ