கடந்த செப்டம்பர் 02- ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்கள், மாநில அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தி.மு.க.வில் உள்ள கூட்டணிக் கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சனாதனம் தொடர்பாக கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்களில் உடன்பாடு இல்லை எனில் விவாதத்தில் ஈடுபடலாம்.
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!
மிரட்டல் விடுப்பது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது. இணக்கமான சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஏற்றுக் கொள்வோம். உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு கருத்து மாறுபாடுகள், விவாதத்தில் ஈடுபடும் திறன் ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.