Homeசெய்திகள்இந்தியா"யார் இந்த ஃபாலி நாரிமன்?"- விரிவாகப் பார்ப்போம்!

“யார் இந்த ஃபாலி நாரிமன்?”- விரிவாகப் பார்ப்போம்!

-

 

"யார் இந்த ஃபாலி நாரிமன்?"- விரிவாகப் பார்ப்போம்!

இந்தியாவின் தலைச்சிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக அறியபட்ட ஃபாலி நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.

பிரபல நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி… சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள்..

முக்கிய வழக்குகளில் வாதங்களால் மிரட்டிய மறைந்த ஃபாலி நாரிமன்.. யார் இவர்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில் அரசியல் சாசனம் தொடர்பாக, இவர் முன் வைத்த வாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஃபாலி நாரிமன் திறமையாக வாதாடி, ஜாமீன் பெற்றுக் கொடுத்தார்.

காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கில் கர்நாடகா சார்பில் ஆஜராகி இவர் வாதாடியுள்ளார். நாடாளுமன்ற நியமன உறுப்பினராக இருந்துள்ள அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கௌரவித்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

டாப் மலையாள இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் விஜய் மகன்

அதே நேரம், இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்திய போது, தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 1929- ஆம் ஆண்டு ஜனவரி 10- ஆம் தேதி ரங்கூனில் பிறந்த பாலி நாரிமன் மும்பை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், நீதித்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ