இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக இந்திய சுகாதார துறை அறிவிப்பு.தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் 99,435 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் , 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், 1 அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 1 அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்புற சமுதாய மையங்கள் உள்ளன.
தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் கொரோனா காலத்தில் மருத்துவ படுகைகளின் தேவை அதிகரித்ததன் எதிரொலியாக தமிழக முழுவதும் படுக்கைகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டது. இதன் விளைவாக தற்போது அரசு மருத்துவமனைகள் வசம் 99,435 படுக்கைகள் உள்ளது.

இந்திய அளவில் அதிக மருத்துவ படுகுகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்திள்ள உத்திரபிரதேச மாநிலத்தில் 25 கோடி மக்கள் தொகை உள்ளது. அங்கு அரசு மருத்துவமனைகளில் 66,700 படுக்கைகள் மட்டுமே உள்ளது.
11 கோடி மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 31,028 படுக்கைகளும், 6.5 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்தில் 29,402 படுக்கைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் சுமார் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் ஒரு லட்சம் அளவிலான படுக்கைகள் மருத்துவமனையில் இருக்கிறது என்று இந்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்திய அளவில் சுகாதார துறை பங்களிப்பில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது.