தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தீபாவளி பண்டிகை, மழை, முகூர்த்த நாட்கள், மற்றும் திருமணங்கள் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி ரூ.1800க்கும், முல்லை ரூ.1700க்கும், கனகாம்பரம் ரூ.1500க்கும், ரோஸ் ரூ.300க்கும், பட்டன் ரோஸ் ரூ.250க்கும், காத்திருக்கும் புயல்கள் பன்னீர் ரோஸ் ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், புதுக்கோட்டை மலா் சந்தையிலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகின்றது. நேற்று ரூ.3000க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ முல்லை பூ ரூ.2500க்கும் விற்கப்படுகின்றது.
தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் – செல்வப்பெருந்தகை
