இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த கடுமையான “நோ ஐடி, நோ என்ட்ரி” (No ID, No Entry) விதியை அமல்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படும் அனைத்து இடங்களிலும் நுழைவதற்கு அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கட்டாயமாக்கி மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி, மதுபான பார்கள், பப்கள், கிளப்புகள் மற்றும் மது வழங்கப்படும் பிற இடங்களுக்குள் செல்லும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வயது மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள கவலைகளைத் தொடர்ந்து, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுபானம் அருந்துவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. புதிய நடைமுறையின் மூலம் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மதுபானக் கூடங்களுக்குள் நுழைவதையும், மதுபானம் வாங்குவதையும் கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, இளைஞர்களிடையே மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
