
‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதி நடைபெறும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு
2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில், தொகுதிப் பங்கீடுகளை இறுதிச் செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் முதல் கூட்டம், டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின், இல்லத்தில் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்புக் குழு கூடுகிறது.
திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய சிறப்புக் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் தலைவர்களின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப்பார்க்கப்படுகிறது .