spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇடைக்கால பட்ஜெட்டில் வெளியாக அதிரடி அறிவிப்புகள்!

இடைக்கால பட்ஜெட்டில் வெளியாக அதிரடி அறிவிப்புகள்!

-

- Advertisement -

 

இடைக்கால பட்ஜெட்டில் வெளியாக அதிரடி அறிவிப்புகள்!

we-r-hiring

நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அங்கன்வாடி பணியாளர், ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்; நாடு முழுவதும் புதிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் திட்டம் தொடரும். மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் திட்டங்களை ஊக்குவிக்க ரூபாய் 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது; கடல் உணவு ஏற்றுமதியில் கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்பத்துறைச் சார்ந்த இளைஞர்களுக்கு இது பொற்காலம். மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!

ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்வதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்படும். நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும். கர்ப்பப்பை கேன்சரைத் தடுக்க 9 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.

10 வருடங்களில் 500 பில்லியன் டாலருக்கு அதிகமாக அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. 2023- 24ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி அரசின் செலவு ரூபாய் 40.90 லட்சம் கோடியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ