spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாட்ரம்ப் அரசுக்கு பணிகிறதா மோடி அரசு...? 18 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகளை தாயகம் அழைத்துவர இந்தியா...

ட்ரம்ப் அரசுக்கு பணிகிறதா மோடி அரசு…? 18 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகளை தாயகம் அழைத்துவர இந்தியா முடிவு..!

-

- Advertisement -

அமெரிக்காவில் வசிக்கும் 18ஆயிரம் சட்டவிரோத புலம்பெயர்ந்த இந்தியர்களை மீண்டும் தாயகம் அழைத்துவருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும், நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என மோடி அரசு விரும்புகிறது, ட்ரம்ப் அரசுடன் எந்தவிதமான வர்த்தகப் போரையும் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி, குடியுரிமை இன்றி, விசா காலம் முடிந்தும் தங்கி இருக்கும் 18ஆயிரம் சட்டவிரோத புலம்பெயர் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என ப்ளூம்பெர்க் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக குடியேறியுள்ள புலம்பெயர்ந்தவர்கள், மாணவர்களின் உரிமைகளை அதிபர் ட்ரம்ப் அரசு பாதுகாக்க உதவி செய்ய இந்த நடவடிக்கை உதவும் என மத்திய அரசு நம்புகிறது.அமெரிக்காவில் உண்மையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர் இந்தியர்கள் எண்ணிக்கை 18ஆயிரத்தைக் கடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோத குடியேறிகளை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கு அனுப்பப்படுவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தார். அதற்கு ஏற்றார்போல் அதிபராகப் பதவி ஏற்றதும் நிர்வாக உத்தரவிலும் அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டார்.

we-r-hiring

இப்போதுள்ள நிலையில் புதிதாக பதவி ஏற்றுள்ள அதிபர் ட்ரம்ப் அரசுடன் பொருளாதார ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் நட்புறவை வலுப்படுத்த இந்தியாவின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதனால் 18ஆயிரம் இந்தியர்களை தாயகம் அழைப்பது குறித்து திட்டமி்ட்டு ஆலோசித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அதிபர் பதவி ஏற்றதும், பிறப்புக்குடியுரிமை ரத்து உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டு அதிரடியாக செயல்பட்டார். முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சிபிபி ஒன் செயலியையும் மூடவும் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் சுங்கத்துறை, எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட சிபிபி ஒன் செயலி, 10 லட்சம் சட்டவிரோத குடியேறிகள், புலம்பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த செயலி 2020, அக்டோபர் மாம் தொடங்கப்பட்ட நிலையில் இப்போது ட்ரம்ப் அரசு அதன் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

MUST READ