இந்தியாவின் தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் 95 வயதில் காலமானார்.
இந்திய அணு சக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக ஊட்டியிலுள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை கலைமானார். 1955ல் அணுசக்தித்துறையில் (DAE) சேர்ந்த இவர், இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சரா கட்டுமானத்தில் Dr. ஹோமி பாபாவுடன் பணியாற்றினார்.

அப்சரா தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 1959 இல் மும்பைக்கு அருகில் இந்தியாவின் முதல் அணு மின் நிலையமான தாராபூர்-1 ஐ அமைப்பதற்காக முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். இது இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சியால், அக்டோபர் 28, 1969 அன்று தொடங்கப்பட்டது. தாராபூர்-1 தொடங்கப்பட்ட பிறகு, ஸ்ரீனிவாசன் தலைமையில் 18 அணு மின் அலகுகள் உருவாக்கப்பட்டன.
1967 ஆம் ஆண்டு, மெட்ராஸ் அணு மின் நிலையத்தின் தலைமை திட்டப் பொறியாளராகப் பொறுப்பேற்றார்.
1974 ஆம் ஆண்டில், கொலாபாவில் அலுவலகங்களைக் கொண்ட மின் திட்டங்கள் பொறியியல் பிரிவின் இயக்குநரானார், மேலும் 1984 இல் அவர் அணுசக்தி வாரியத்தின் தலைவரானார்.
இந்தப் பணிகளில், நாட்டின் அனைத்து அணு மின் திட்டங்களின் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் செயல்பாட்டை அவர் மேற்பார்வையிட்டார்.
1987ல் அணுசக்தி ஆணைய தலைவர் & DAE செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகள் சாரதா சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்:
“அப்பா, வேலை என்பது ஒரு கடமை என்றும், மற்ற விஷயங்கள் எதுவாக இருந்தாலும் ஒரு நாள் கூட வேலையைத் தவறவிடக்கூடாது என்றும் நீங்கள் எப்போதும் சொன்னீர்கள், இருப்பினும் இது நியாயமில்லை.
உங்கள் வாழ்க்கையின் 95வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் எங்கள் திட்டங்களைப் பற்றி இரண்டு நாட்களுக்கு முன்புதான் உங்களிடம் சொன்னேன்” என குறிப்பிட்டுள்ளார்.