Homeசெய்திகள்இந்தியாஇஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' திட்டம் தொடக்கம்!

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் தொடக்கம்!

-

 

'மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்'- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
File Photo

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!

இஸ்ரேல்- ஹமாஸ் குழுவினர் இடையேயான போர் ஆறாவது நாளாக நீடிக்கிறது. இதில் பாலஸ்தீனர்கள் 1,100 பேரும், இஸ்ரேலியர்கள் 1,200 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், காசா மீதான வான்வழி தாக்குதலுடன், தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம், இஸ்ரேலுக்கு வந்ததை ராணுவம் உறுதிச் செய்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவியில் உள்ள இந்திய தூதரகம், சிறப்பு விமானத்திற்காக பதிவுச் செய்த இந்தியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

இஸ்ரேலில் அவசரகால ஒருங்கிணைப்பு அரசு!

இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக, ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான, சிறப்பு விமானங்கள் மற்றும் இதர ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகவும், வெளிநாட்டில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

MUST READ