Homeசெய்திகள்இந்தியாநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!

-

 

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று (மே 05) நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

இன்று (மே 05) மதியம் 02.00 மணிக்கு தொடங்கும் நீட் நுழைவுத்தேர்வு மாலை 05.20 மணிக்கு நிறைவுப் பெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது; ஜூன் 14- ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

‘கோடைக்காலங்களில் சாமானிய மக்களுக்கே முன்னுரிமை’- திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

நீட் தேர்வு- முறைகேடுகளைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள்!

முறைகேடுகளைத் தடுக்க நீட் தேர்வில் மாணவ, மாணவர்களுக்கு கடுமையான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்கு 01.30 மணிக்கு முன்பாக வர வேண்டும்; மெட்டல் டிடெக்டர் கொண்டு தேர்வர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். காகிதம், பென்சில், கால்குலேட்டர், பிரேஷ்லெட், வாட்ச், மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை. எளிதில் தெரியும் படியான தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே நீட் தேர்வு அறையில் அனுமதிக்கப்படும். ஷூ அணிந்து வர அனுமதியில்லை; முறைகேடு புரிந்தால் 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ