Homeசெய்திகள்இந்தியாவெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

-

 

வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், வெங்காயம் ஏற்றுமதி குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!

உள்நாட்டில் தேவைக்கு ஏற்றவாறு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதும், தடை விதிப்பதுமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உள்நாட்டில் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் வகையில் வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நட்புறவு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழலில், வெங்காயம் ஏற்றுமதிக்கு 40% வரி விதித்து மத்திய அரசு நேற்றிரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம், வெங்காயம் ஏற்றுமதிக்கு இருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!

அதேநேரம், ஒரு மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதிக்கான விலையாக 550 அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் ரூபாய் 45,000 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2023- 2024 ஆம் நிதியாண்டில் 254 லட்சம் டன்கள் வெங்காயம் உற்பத்திச் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்திருந்தது.

MUST READ