
இஸ்ரேல்- ஈரான் மோதலை உற்றுநோக்குவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்திய வெளியுறவுத்துறை கவலைக் கொண்டுள்ளது.
உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனக் கேட்டு கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம்!
இஸ்ரேல்- ஈரான் தாக்குதல்கள் உலகின் மூன்றாவது போராகப் பார்க்கப்படுகிறது. தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.