இஸ்ரோவில் ராக்கெட் ஏவும் நிகழ்வு அறிவிப்பாளரான வளர்மதி (வயது 50) மாரடைப்பால் காலமானார்.
நிர்வாணமாக்கப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்….முதலமைச்சர் நேரில் ஆறுதல்!
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வளர்மதி (வயது 50) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மாரடைப்பால் நேற்று (செப்.03) அவரது உயிர் பிரிந்தது. வளர்மதியின் மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவும் நிகழ்வுகளை அறிவிக்கும் மிஷன் ஸ்பீக்கராகப் பணியாற்றி வந்தவர் வளர்மதி. கம்பீரமான குரல் தொழில்நுட்ப வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் என பல திறமைகளைக் கொண்டிருந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகளின் பாராட்டைப் பெற்றவர்.
சந்திரயான்- 2 உள்பட கடந்த ஆறு ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட் நிகழ்வுகளின் அறிவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.