Homeசெய்திகள்இந்தியா"சனாதன தர்மத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இழிவாகப் பேசியுள்ளார்"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

“சனாதன தர்மத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இழிவாகப் பேசியுள்ளார்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

-

 

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, அதற்கு மேடையில் இருந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன்? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“காவி மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், வாக்கு வங்கி அரசியலுக்காக சனாதன தர்மத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இழிவாகப் பேசியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியும், ஏற்கனவே பேட்டி ஒன்றில் சனாதனத் தர்மத்தை அழிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அது தொடர்பான படக்காட்சிகளையும் இணைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தி.மு.க. உடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாவிட்டால், அந்த கட்சி இந்துகளுக்கு எதிரானது என்பது நிரூபணமாகும் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் ராகுல் காந்திக்கு ஒரு சோதனை என்றும், சனாதனத்தை ஆதரிக்கிறாரா? அல்லது எதிர்க்கிறாரா? என்பது இதில் இருந்து தெரிய வரும் என்றும் அசாம் மாநில முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

அமைச்சர் உதயநிதியின் பேச்சு தேசத் துரோகத்துக்கு இணையானது என்றும், இதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

MUST READ