
சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நிர்வாணமாக்கப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்….முதலமைச்சர் நேரில் ஆறுதல்!
சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவராகப் பேசியதாக அவர் மீது வழக்குத் தொடரப்படும் என சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் சிலர் பதிவிட்டிருந்தனர். அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இதுப்போன்ற காவி மிரட்டல்களுக்கு தாங்கள் அஞ்ச மாட்டோம்; திராவிட மண்ணில் சனாதனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தங்களின் தீர்மானத்தில் இருந்து ஒரு துளிக் கூட பின் வாங்கப் போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போடப்பட்ட மற்றொரு பதிவிற்கு, எனது கருத்தில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சனாதனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் இருந்து தான் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


