Homeசெய்திகள்அரசியல்38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்

38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்

-

38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்

புதுவையில் 38 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் தலா 50 ஆயிரம் டெபாசிட் செய்து அதற்கான வங்கி புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் முதல்வரின் பெண் குழந்தைகளுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்தல் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார்.

38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினா

அதன் அடிப்படையில் முதல்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதிக்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 19 லட்சம் செல்வ மகள் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கப்பட்டு வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ள வங்கி புத்தகத்தை நேற்று வழங்கினார்.

38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினா

மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் 21 முதல் 55 வயதிற்குட்பட்ட வேறு எந்த அரசு உதவி தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக தட்டான் சாவடி தொகுதியை சேர்ந்த 300 பேர் மங்களம் தொகுதியை சேர்ந்த 1,300 பேருக்கும் அடையாள அட்டையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

MUST READ