spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்

சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்

-

- Advertisement -

சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்

ஆந்திர மாநிலம் முதல்வர் ஜெகன்மோகன் கடந்த ஒரு வாரமாக லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சொந்த பயணமாக சென்ற ஜெகன்மோகன் இன்று காலை விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

Jagan Reddy orders legal action against Chandrababu Naidu over 'graft' in  power purchase pacts | India News - Times of India

சந்திரபாபு கைதை தொடர்ந்து சட்டம், ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தக்கூடிய ஜெகன்மோகன் நாளை டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க உள்ளார். வரும் 18ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதில் மத்திய அரசு பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதற்கு ஜெகன்மோகன் ஆதரவு அளிப்பது குறித்தும், சந்திரபாபு நாயுடு கைது சம்பவம் குறித்தும் ஆலோசிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

we-r-hiring

ஏற்கனவே சந்திரபாபுவை திறன் மேம்பாட்டு பயிற்சி மோசடியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு வழக்குகளில் சந்திரபாபு, முன்னாள் அமைச்சர் நாராயணா சந்திரபாபு மகன் லோகேஷ் மீது அமராவதி தலைநகரில் இன்னர் காரிடார் சாலை அமைப்பது, அமராவதி என்ற பெயரில் மோசடி செய்தது போன்ற இரண்டு வழக்குகள் இருப்பதாகவும் அது குறித்தும் சந்திரபாபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் சிஐடி தரப்பு வழக்கறிஞர் சுதாகர் ரெட்டி கேட்டுக்கொண்டார்.

CM Jagan Mohan Reddy meets Prime Minister Modi to discuss key projects in  Andhra Pradesh - India Today

இந்த சம்பவத்தை அடுத்து சந்திரபாபு, லோகேஷ் சிறையில் அடைத்து முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைத்து தேர்தலை சந்திக்க ஜெகன்மோகன் திட்டம் வகுத்திருப்பதாகவும் இதற்காக டெல்லி சென்று வந்தவுடன் அமைச்சரவை கூட்டம் நடத்தி அதன்பிற்கு சட்டப்பேரவை கூட்டி முன்கூட்டிய தேர்தலை சந்திக்க சட்டப்பேரவை கலைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ