ஜம்மு காஷ்மீரில் இரு முன்னாள் முதல்வர்களும் பின்னடைவு… பாஜக முன்னிலை…
- Advertisement -

18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. அடுத்து இயந்திர வாக்குள் எண்ணப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்ட இரண்டு முன்னாள் முதல்வர்களும் பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றனர். பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் அப்துல் முன்னிலை வகிக்கிறார். அதேபோல, அனந்த்நாக் – ரஜோரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் மெகபூபா முக்தி சுமார் 80 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.