Homeசெய்திகள்இந்தியா"ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செல்லும்"- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

“ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செல்லும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

-

 

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவை நீக்கியதை எதிர்த்த வழக்கில் மூன்று விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனித்தீர்ப்பையும், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், நீதிபதிகள் கன்னா மற்றும் கவுல் ஆகியோர் தனித் தீர்ப்புகளையும் வழங்கி உள்ளனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைவு!

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அளித்துள்ள தீர்ப்பில், “சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்ற முடிவுக்கு வருகிறோம். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லுபடியாகுமா? என்ற கேள்விக்கு தீர்ப்பளிக்க தேவையில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, மாநிலங்களில் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் கேள்விக் கேட்க முடியாது.

குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது, மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களின் அதிகாரத்தில் வந்துவிடும். மாநிலத்தின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்துவதை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. மாநிலத்தில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக, செய்யப்பட்ட தற்காலிக ஏற்பாடு தான் சட்டப்பிரிவு 370. அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது.

ஜம்மு- காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது அரசியலமைப்பில் தெளிவாகிறது. ஜம்மு- காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை; ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவை நீக்கியதுச் செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

அதேபோல், ஜம்மு- காஷ்மீர் அரசியலமைப்பு சபை ஒரு தற்காலிக அமைப்பே என்று குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, 2024- ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் நடத்தி, மாநில அரசை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேபோல், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்த முடிவை உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அங்கீகரித்தனர்.

MUST READ