Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

-

- Advertisement -

 

தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
Video Crop Image

அமைச்சர், மேயரை தொடர்ந்து மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வுச் செய்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

we-r-hiring

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்!

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசன், வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு திரண்ட பொதுமக்கள், மழை வெள்ளத்தால் வீடு, உடைமைகளைப் பறிகொடுத்துவிட்டதாக தங்களது வேதனைகளைப் பதிவுச் செய்துக் கொண்டனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த போது, மீட்புப் பணிக்கு யாருமே வராத நிலையில், தற்போது நிவாரண டோக்கனை மட்டுமே விநியோகிக்க வந்தது ஏன்? என கேள்வி எழுப்பி, நிவாரண டோக்கனை வாங்க மறுத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எபினேசனை முற்றுகையிட்டனர்.

இமயமலைப் பகுதியில் நிர்வாணமாக பிறந்தநாளை கழித்த விஜய் பட நடிகர்

இதனால் தி.மு.க.வினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது, தி.மு.க. நிர்வாகிகள் தாக்கியதில் பொதுமக்களில் சிலர் காயமடைந்தனர். அதில், படுகாயமடைந்த ஒருவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

MUST READ