spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகர்நாடகா தேர்தல்- வெற்றியை ருசித்த நட்சத்திர வேட்பாளர்கள்

கர்நாடகா தேர்தல்- வெற்றியை ருசித்த நட்சத்திர வேட்பாளர்கள்

-

- Advertisement -

கர்நாடகா தேர்தல்- வெற்றியை ருசித்த நட்சத்திர வேட்பாளர்கள்

மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Image

 

we-r-hiring

காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

இந்நிலையில் கனபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் முன்னிலையில் உள்ளார். இதேபோல் முன்னாள் முதல்வரும், கர்நாடகா மாநிலம் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சித்தராமையா முன்னிலையில் உள்ளார். சித்தாபூர் தொகுதியில் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே முன்னிலையில் உள்ளார். அதேசமயம், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் பெங்களூரு காந்தி நகர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Image

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

குமாரசாமிக்கு பின்னடைவு

இதேபோல் முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி, சென்னபட்னா தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராமநகர தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பின்னடைவை சந்தித்துள்ளார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சிக்காவ்ன் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

MUST READ